நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் பேச்சில் தடுமாற்றம், நடையில் தடுமாற்றம் உட்பட பல்வேறு உபாதைகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் தொடர் சிகிச்சையில் இருந்து விட்டு ஊர் திரும்பிய விஜயகாந்தை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஒரு மெழுகு விளக்கை பரிசாக அளித்தார்.

அப்போது அவரிடம் இன்னும் நாலு மாதத்தில் பழைய விஜயகாந்த்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.

இதை பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.