சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை காலை சென்னை திரும்புகிறார்.

விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரின் இளைய மகன் சண்முகபாண்டியன் உடன் சென்றனர். அதன்பின் புத்தாண்டு மற்றும் குடியரசு தினங்களில் தொண்டர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து கூறினார். மேலும், அமெரிக்காவில் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

அவர் பூரண நலன் பெற்று விரைவில் சென்னை திரும்புவது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 8ம் தேதி அவருக்கு சிறுநீரக அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவரின் உடல்நலம் நன்கு தேறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பூரண நலன் பெற்று விரைவில் அவர் சென்னை திரும்புவார் என அவரின் மைத்துனர் சுதீஷ் சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில், நாளை காலை 8.30 மணியளவில் அவர் சென்னை விமானம் நிலையம் வருகிறார். எனவே, அவரை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். எனவே, கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.