விஜயகாந்த் பட டைட்டிலை கைப்பற்றிய பிரபுதேவா

 

நடிகர் பிரபுதேவா தற்போது விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஆகாஷ் சாம் என்ற புதியவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று படக்குழுவினர் ஆலோசித்தனர். தற்போது விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் படமான ஊமை விழிகள் தலைப்பை வைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.