அமெரிக்காவில் அக்வாமேன் படம் பார்த்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்க சென்றார். அவரோடு அவரின் மனைவி பிரமேலதாவும் சென்றுள்ளார்.

இந்த மாத இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பின் ஓய்வெடுக்கும் அவர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நேற்று இரவு ஐமேக்ஸ் திரையரங்கில் மனைவி பிரேமலதாவுடன் அக்வாமேன் படத்தை பார்த்த ரசித்துள்ளார். அந்த திரையரங்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.