Actres Vijayalakshmi – ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன்பின் அவர் சில தமிழ் படங்களில் நடித்தாலும் சரியான வாய்ப்பு அமையவில்லை. எனவே, கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். ஆனால், சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. எனவே, பண நெருக்கடியில் சிக்கினார். மேலும், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனக்கு கன்னட திரையுலகினை சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டார். ஆனால், அவர்கள் யாரும் அவருக்கு உதவில்லை. அதன்பின், நடிகர் ரஜினி தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி ‘ரஜினி சார் என்னிடம் பேசினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் என் பிரச்சனைகளை பொறுமையாக கேட்டு அன்பாகவும், மனிதாபமானத்துடன் அவர் பேசினார். என் பிரச்சனைகளை சரி செய்வதாகவும் கூறினார். அவருக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மீது எனக்கு இருந்த மரியாதை நூறு மடங்காகி விட்டது” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.