பாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..

08:49 காலை

பாகுபலி படத்தின் கதையாசிரியர் அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுத இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

தெலுங்கில் பல வெற்றி படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை அவர். ராஜமௌலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் இவர்தான். மேலும், பாகுபலி முதல் மற்றும் இரண்டு பாகங்களுக்கும் இவர்தான் கதையாசிரியர்.

சமீபத்தில் வெளியான பாகுபலி2 மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவில் அதிக வசூலை இந்த படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு விஜயேந்திர பிரசாத்தே கதையாசிரியர். அடுத்து, இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுதுகிறார். ராஜமௌலியின் உதவியாளர் மகாதேவ் இப்படத்தை இயக்குகிறார்.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
சிவ குமார்

சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544