விஜயகாந்தின் மருமகள் வெள்ளைகார பெண்ணா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

shanmugapandian

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் நாயகனாக சினிமா உலகத்தில் அடியெடுத்து வைத்தார. ஆனால் அவரது முதல் படமானது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன்பின் அவர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டனின் திரையுலக வாரிசாக சண்முக பாண்டியன் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து தன்னுடைய அப்பாவை போல வரவேண்டும் என்பது ரசிகா்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சண்முக பாண்டியன் மூன்றாவது படமாக தன் அப்பா விஜயகாந்துடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சண்முக பாண்டியன் வெள்ளைகார பெண்ணுடன் இருக்கும் போட்டோ தனது இன்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய சண்முகபாண்டியன் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை தான் பகிர்ந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி என்னுடைய … என்று இடைவெளி விட்டு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது என்று விசாரித்த போது அவருடன் நெதர்லாந்தில் படித்தபோது உடன் இருந்த தோழியாம். இப்படி இடைவெளி விட்டு இது நல்ல வருடம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி இடைவெளிவிட்டு பதிவு செய்துள்ளதை பார்க்கும் போது நெட்டிசன்கள் இவர்தான் விஜயகாந்தின் மருமகளா இருப்பாரா என்று கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர்.