நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி நடிக்கும் அடுத்த படம் ‘தளபதி 63’ குறித்து புதுவித மாடலில் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இப்படத்தை அட்லி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, ரசிகர்களுக்கு ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களின் வரிசையில் அடுத்து உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழுவினர் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி 2019க்கு ரிலீசாகும் என ஏற்கனவே தெரிவித்தது.

இந்நிலையில், இன்று வெளியான இப்படத்தின் போஸ்டர் ரிசகர்களுக்கு மேலும் சர்பரைஸ் கொடுத்துள்ளது. அந்த போஸ்டரில், ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி உடன் எண்கள் வந்துள்ளது. இதனையடுத்து, விஜயின் ‘தளபதி 63’ படம் விளையாட்டு சம்பந்தமாக மாஸ் எண்டரடெயினர் படமாக உருவாக உள்ளதாக வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.

‘கில்லி’ படமானது விளையாட்டை மையப்பகுதியாக வைத்து உருவானது. இப்படம் ரசிகர்களிடையே பக்கா மாஸானதைப் போலவே, தற்போது உருவாகவுள்ள ‘தளபதி 63’ படமும் இருக்கும் என கூறப்படுகிறது.