ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் டீசரை அண்மையில் (அக்.19) மாலை 6 மணிக்கு வெளியிட்டது.

இந்த ‘சர்கார் டீசர்’ வெளியான 17 மணி நேரத்திலேயே 1 கோடியே 30லட்சம் பார்வையாளர்கள் இதனை பார்த்துள்ளனர். மேலும், உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தில் இருக்கும் ‘அவென்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் டீசர் 36 மணிநேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்தது.

ஆனால், இந்த சாதனையை ‘சர்கார் டீசர்’ வெறும் 5மணி நேரத்திலேயே 10 லட்சம் லைக்குகளை பெற்று முறியடித்தது. இதனால், சர்கார் படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், ‘சர்கார் டீசர்’ பார்வையாளர்கள் 1கோடியே 30 லட்சம் மற்றும் 10 லட்சம் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்தது என இரண்டிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது.

தற்போது, ‘சர்கார் டீசர்’ வெளியான 48 மணிநேரத்தில் 2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் சர்கார் டீசர் மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது.