ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் டீசர் நாளை (அக்.19) வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில், ராதா ரவி, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து உற்சாகமடைந்துள்ள ரசிகர்களுக்கு தற்போது மீண்டும் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை(அக்.19) மாலை 6மணிக்கு யூடியூப்பில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.