ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக போகும் படம்தான் ‘சர்கார்’. இப்படத்தின் புரொமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியானது. இப்பாடல் பல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. ‘நேத்து வர ஏமாளி இன்று முதல் போராளி’ ‘ ஒரு விரல் புரட்சியே’ என தொடங்குகிறது. இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.