நடிகர் விஜய் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்து கத்தி, துப்பாக்கி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்ததையடுத்து இந்த கூட்டணி மூன்றாவதாக சர்கார் படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து இது வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சன் பிக்சர் தயாரிக்கும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அதிகாரபூர்வமாகவே தொடர்ந்து வெளியிட்டுவந்தது படக்குழு. இந்நிலையில் படத்தின் ஆடியோ அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்பட்டநிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இந்த படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்து படப்பிடிப்புத் தளத்தில் படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடித்திருப்பது கீர்த்தி சுரேஷ். இந்த சர்கார் கூட்டணி தீபாவளிக்கு பட்டாசாக வெடிக்கும் என உறுதியாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.