இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் அவர் முதன்முதலாக 3 வேடங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே. அதில் பஞ்சாயத்து தலைவர் அப்பா மற்றும் டாக்டர் மகன் ஆகிய இரண்டு கேரக்டர்கள் இதுவரை கசிந்துள்ளது. ஆனால் மூன்றாவது கேரக்டர் இதுவரை சஸ்பென்ஸ் ஆக இருந்த நிலையில் தற்போது அந்த கேரக்டர் குறித்த தகவலும் வந்துவிட்டது.

விஜய்யின் மூன்றாவது கேரக்டர் ஒரு மந்திரவாதியாம். மாயாஜாலம் செய்யும் கில்லாடி வேடத்தில் நடித்திருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு மெல்லிய காதல் உண்டு என்றும், அவர் மனம் கவர்ந்த காதலி சமந்தா என்றும் கூறப்படுகிறது.

விஜய் இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரை மிக அழகாக அட்லி மெருகேற்றியுள்ளராம். அதுமட்டுமின்றி கிளைமாக்ஸில் இந்த கேரக்டர் தான் சூப்பராக கலக்குமாம். எனவே விஜய் ரசிகர்களுக்கு 'தளபதி 61' செம விஷூவல் விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.