பேட்ட படத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக இல்லை என்று அவர் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் இப்படி இருப்பதற்கு ரஜினியே காரணம்....

இன்று உலகெங்கிலும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகி சக்கபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து குத்தாட்டம் போட்டு படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

 

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.ஆக விஜய்சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தை ஆர்வமாக பார்க்க வந்தனர்.ஆனால் படத்தில் ரஜினிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் விஜய் சேதிபதியின் கதாபாத்திரம் பெரிதாக பேச படவில்லை என்பதே உண்மை.

இதையும் படிங்க பாஸ்-  கருப்பன் பட விழா - ஓ.பி.எஸ்-ஐ கிண்டலடித்த விஜய் சேதுபதி

இதனால் கடும் காண்டான விஜய்சேதுபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.