தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக படங்கள் நடித்த நடிகர் விஜய்சேதுபதிதான். திரையுலகிற்குள் நுழைந்த ஒருசில ஆண்டுகளில் அவர் தனது 25வது படத்தை முடித்துவிட்டார்’

இந்த நிலையில் வரும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜய்சேதுபதி நடித்த நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரியில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படமும் மார்ச் மாதத்தில் ஜூங்கா’ படமும் ஏப்ரலில் சீதக்காதி மற்றும் 96 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர இமைக்கா நொடிகள், சூப்பர் டீலக்ஸ், நரசிம்ம ரெட்டி, மணிரத்னம் படம் ஆகிய படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரவுள்ளது.

Loading...