சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டாலும் படக்குழுவினர் இதனை உறுதி செய்யவில்லை. இருப்பினும் முதல்முறையாக ரஜினி-விஜய்சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.