கவுதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக பிரபல நடிகை நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய், பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதில், கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இணைய தொடராக எடுத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். ஜெ.வின் நெருங்கிய தோழியான சசிகலா வேடத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் சோமன் பாபு வேடத்தில் வம்சி கிருஷ்ணாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் இந்திரஜித்தும் நடிக்கவுள்ளனர்.

இப்படம் விரைவில் இணையத்தில் தொடராக வெளியாகும் எனத் தெரிகிறது.