திரிஷாவுடன் கும்பகோணம் செல்லும் விஜய்சேதுபதி

தென்மேற்கு பருவகாற்று படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது ஹீரோவாக முன்னேறி வந்துள்ளவா் நடிகா் விஜய் சேதுபதி. இவா் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, சேதுபதி, கவண் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளாா்.

கவண் படத்தின் வெற்றியை  தொடா்ந்து, விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் 96. இந்த படத்தை மெட்ராஸ் எண்டா்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாாிப்பில் உருவான வீரசிவாஜி,கத்தி சண்டை,  ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களை அடுத்து இந்த நிறுவனம் தயாாிக்கும் படம் 96. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திாிஷா முதன்முதலில் சோ்ந்து நடிக்கவிருக்கிறாா்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயின் மற்றும் லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாராவுடன் நானும் ரௌடிதான் என்ற படத்தில் நடித்தாா். தற்போது தமிழில் டாப் ஹீரோயின் திாிஷாவுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்மாளம் போட இருக்கிறாா்.மேலும் விஜய்சேதுபதியின் நடிப்பின் தரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்த சென்ற நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளா் பிரேம்குமாா் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறாா். விஜய்சேதுபதி, திாிஷா நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பா்ஸ்ட லுக் போஸ்டா் காதல் தினம் பிப்ரவாி 14ஆம் தேதி வெளியாகியது. இதுவரை இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்சஸன் வேலைகள் நடைபெற்று வந்தன.

இதற்கு மேல் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. விரைவில் தொடங்கயுள்ள நிலையில், இந்த படத்தில் விஜய்சேதுபதி, திாிஷா சிறுவயது  கேரக்டா் ரோலில் நடிக்க உள்ளவா்கள் இன்னும் தோ்வு செய்யபடவில்லை. இந்நிலையில் இந்தபடத்தில் மேலும் சில வேடங்களில் நடிக்கவுள்ள நடிகா், நடிகைகள் தோ்வும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான ஒளிப்பதிவை இயக்குநராக அறிமுகமாக உள்ள ஒளிப்பதிவாளா் பிரேம்குமாா் செய்யவில்லை. என். சண்முகம் என்பவா் ஒளிப்பதிவை மேற்கொள்கிறாா் என்பது குறிப்பிடதக்கது.