003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார்கள். விக்ரம் நடித்து ஹரி இயக்கி வரும் சாமி படத்தின் இரண்டாம் பாகமானது சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மாஸ் ஹிட் அடித்த படமான சாமி திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஜோடியாகவும் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாமி ஸ்கொயர் என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விக்ரம் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பிரபு, ஜான் விஜய், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான், ஓ.கே.சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த படப்பிப்பு திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த வந்தது. கிட்டதட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.