விக்ரம் ஜோடியான விஜய் பட நாயகி

இருமுகன் வெற்றியை அடுத்து விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். வேகமாக நடைபெற்றுவரும் இந்த படத்தினை அடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடிக்கிறார் விக்ரம். கடந்த 2003ம் ஆண்டு வெளீவந்த சாமி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல்பாக இறுதி காட்சியான கோட்டா சீனிவாச ராவை எரிப்பார் விக்ரம். அதிலிருந்தே தொடங்குகிறதாம்.

இப்படத்தில் திரிஷா,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் விக்ரமுடன் ஜோடி சேறும் முதல் படமிது.இருமுகம் படத்தை தயாரித்த தமீன்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கின்றனர்.