நடிகர் விக்ரம் நடித்துவரும் மகாவீரர் கர்ணா படம் பிரம்மாண்ட செலவில் தயாராவது தெரிய வந்துள்ளது.

கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விக்ரம் தற்போது மகாவீரர் கர்ணா படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, மலையாளம் என 3 மொழிகளில் தயாராகிறது. இப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.

மகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத்,ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.