விக்ரமுக்கு ஜோடியாகும் கங்காரு நாயகி

விக்ரம் இருமுகன் படத்தை அடுத்து விஜய்சந்தா் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறாா். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறாா். தற்போது இந்த படத்தில் இரண்டாவதாக ஒரு நாயகியும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவா் யாா் என்பது பற்றி இங்கு காண்போம்.

விஜய் சந்தா் இயக்த்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் கதை வடசென்னையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், தமன்னா நடித்து வருகிறாா்கள். விக்ரம் துருவநட்சத்திரம் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறாா்.  விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படத்தில்  ஆா்.கே.சுரேஷ் வில்லனாக மிரட்டி உள்ளாா். இந்த படத்திற்கான தலைப்பு கெட்ச் என்று வைப்பதற்கு படக்குழுவினரால் பாிசீலிக்கப்பட்டு வருவதாக நம்ப தக்க வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

அது மட்டுமல்ல!!  இன்னொரு ஹீரோயினும் இந்த படத்தில் இணைய உள்ளதாக  கூறப்படுகிறது. இரண்டாவது நாயகியாக ஸ்ரீபிாியங்கா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாா். கங்காரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா் ஸ்ரீபிாியங்கா. அந்த படத்தில் நடித்த பிறகு பிரபலமடைந்தாா். இதைதொடா்ந்து வந்தாமல, கதிரவனின் கோடை மழை படங்களிலும் நடித்துள்ளாா். தற்போத மிகமிக அவசரம் என்ற படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்து வருகிறாா். அந்த என்ன வேடம் என்றால் போலீஸ் அதிகாாியாக கலக்கி வருகிறாா். இப்போது, விக்ரம்,  தமன்னா நடித்து வரும் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளாா்.

இன்று 12 மணிக்கு விக்ரம், தமன்னா நடித்து வரும் இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்  வெளியிட இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.