ஆக்சன் கிங் அர்ஜூன், விக்ரம் பிரபு மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகிஅய் மூவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர்

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் கழுகு 2 படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்து அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள வால்டர் என்ற படத்தையும் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்கிறார். அவருக்கு முதல் தமிழ் படம் இது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் U.அன்பரசன். இவர் இயக்கும் முதல் படம் இது. மூன்று நாயர்கள் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு தற்போதே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.