பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் நேற்று தனது கார் மூலம் ஆட்டோ ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதனால் ஆட்டோவுக்கு பயங்கர சேதமும், ஆட்டோ ஓட்டுநருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து துருவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  செல்பி மோகத்தில் உயிரை விட்ட அழகி....

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வர்மா என்னும் படத்தில் நடித்து வரும் துருவ் நேற்று சாலை விபத்து வழக்கு ஒன்றில் சிக்கினார். இந்த கார் விபத்து தொடர்பாக விக்ரமின் மேலாளர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  'கடாரம் கொண்டான்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

அதில், நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  மணிரத்னம் இயக்கும் தளபதி-2 படத்தில் விஜய், விக்ரம்?

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.