தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகா், நடிகைகள் தங்களது வாரிசுகளை களம் இறங்கி வருகிறார்கள். ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்தில் தனது மகனுடன் நடித்திருக்கிறார். விஜய் தனது மகனை ஏற்கனவே ஒரு பாடல் காட்சியில் சோ்ந்து நடித்துள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் முன்னணி நடிகரான விக்ரம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார். அவரது மகன் அறிமுகமாகும் முதல் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரான பாலாதான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் தெரிந்த செய்தி தான்.

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வா்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகா்கள் மத்திலயில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் நடைபெற இருக்கிறது. விக்ரம் மகன் துருவ் உள்பட படக்குழுவினா் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். வா்மா படமானது தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் ஜோக்கர் புகழ் ராஜிமுருகன் வசனம் எழுதுகிறார். ராதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். துருவ் நடிக்கும் இந்த முதல் படத்தை டிசம்பர் மாதத்தில் திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் படக்குழுவினா்.