Actor Kathir in Vikram Vedha Movie Images

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கதிர், அடுத்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் விக்ரம் வேதா படம்தான் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்து தன் முத்திரையை பதித்துள்ளார். கதிர் திருமணம் வரும் ஞாயிற்று கிழமை அன்று ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் வைத்து நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  சுந்தரபாண்டியன் படத்துக்கு பின் எஸ்.ஆர் பிரபாகருடன் இணையும் சசிக்குமார்

தற்போது கதிர் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து வருகிறார். இதோடு சத்ரு, சிகை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். நடிகா் கதிருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சியத்திருக்கிறார்கள். ஈரோட்டைச் சோ்ந்த தொழில் அதிபரான வாசுதேவன்,ஜெயந்தி தம்பதிகளின் மகளான சஞ்சனாவுக்கும் கதிருக்கும் திருமணம் பெற்றோர்களால் நிச்சியிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  96 பட இயக்குனருக்கு விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்

ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் வைத்து வருகிற 4ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாலை 5 மணிக்கு இவா்களது திருமணம் நடக்க உள்ளது. முதல் நாள் பெருந்துறை மேட்டுக்கடையில் உள்ள ஸ்ரீதங்கம் மஹாலில் வைத்து திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பா்கள் மற்றும் உறவினா்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனா். ஆனால் சென்னையில் வைத்து திருமண வரவேற்பு தனியாக நடைபெற இருக்கிறது.