இந்த ஆண்டில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படத்தை அடுத்து மிகப்பெரிய அளவில் வசூல் அளவில் வெற்றி பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. ஜிஎஸ்டி-ஆல் திரையரங்கு கட்டணம் அதிகரித்த போதிலும் இரண்டாவது வாரமாக வசூலை குவித்துக் கொண்டிருக்கின்றது இந்த படம்

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த கேரக்டர்களில் வெங்கடேஷ் மற்றும் ராணா நடிக்கவுள்ளதாகவும், தமிழில் இயக்கிய கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இந்த படத்தை தெலுங்கிலும் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்யவுள்ளதாகவும், முன்னணி பாலிவுட் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.