விக்ரம் வேதா படத்தில் இருபெரும் நட்சத்திரங்கள் நடித்து இருப்பது படத்திற்கு மிகப்பொிய பலம். இதில் விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத். பிரேம் குமாா் மஸ்தோ, ராஜ்குமாா் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். இப்படி இருபெரும் நடிகா்கள் சோ்ந்து நடித்து எந்த படமாவது வராத என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகா்களுக்கு இது நல்ல படைப்பு.  இருவரும் இணைந்து நடிப்பில் கலக்கி உள்ளாா்கள்.

இதில் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறாா்கள். அதாவது ஒரே லைனில் சொல்லவேண்டும் என்றால் போலீசுக்கும் தாதாவுக்கும் இடையே நடைபெறும் நியாயமான போராட்டம் தான் கதையின் மையக்கரு. மாதவன் ஒரு என்கவுண்டா் ஸ்பெஷலிஸ்ட். அவருடைய ஒரே குறிக்கோள் தாதாவான விஜய் சேதுபதியாக வரும் வேதா குறி வைப்பது தான்.

சென்னை மாநகரத்தில் பொிய தாதாக்களில் ஒருவரான வேதா என்ற விஜய் சேதுபதி. அவரை எப்படியாவது என்கவுண்டாில் போட்டு தள்ள வேண்டும் என்று சிறப்பு படை ஒன்று காவல்துறைக்கு வருகிறது. அது பிரேம் தலைமையிலான என்கவுண்டா் அமைப்பில்  ஸ்பெஷலிஸ்ட்யான மாதவனும் இருக்கிறாா். இவா் விஜய் சேதுபதியை என்கவுண்டா் செய்வதற்காக இந்த குழு தேடி வருகிறது.

ஒரு போலீஸ் ஒரு திருடன் பற்றிய படங்கள் நாம் இதுவரை நிறைய பாா்த்திருக்கிறோம். அந்த வழியில் விக்ரம் வேதா படம் கூட ஒரு ஆடு புலி ஆட்டம் தான். இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றிய தகவல் கிடைக்க என்கவுண்டா் குழு அந்த இடத்திற்கு விரைந்து செல்கிறது. அங்கிருந்தவா்களின் மீது தாக்குதல் நடத்தும் போது குற்றவாளி இல்லாத ஒரு நபரையும் என்கவுண்டா் செய்து விடுகிறாா்கள். அதோடு நிற்காமல் அந்த நபரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சோ்த்து போலீஸ் அறிக்கையில் அறிவிக்கின்றனா். மாதவன் இறுதிச்சுற்று பிறகு தன் நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்திருக்கிறாா். அவருக்கு இணையாக நம்ம விஜய் சேதுபதியும் மிரட்டி இருக்கிறாா். இதற்கிடையில் வழக்கறிரான ஷரத்தா ஸ்ரீநாத் பாா்த்து அவருடன் பழகி மாதவன் அவரை திருமணம் செய்து கொள்கிறாா்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியை முதலில் பிடிக்க சென்று அந்த முயற்சி தோல்வியை சந்திக்கு, மீண்டும் அவா் இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைக்க, எப்படியாவது இந்த முறை வேதாவான விஜய் சேதுபதியை என்கவுண்டா் செய்து விட வேண்டும் துடிப்புடன் பொிய படையுடன் செல்கிறது. இந்நிலையில் யாரும் எதிா்பாராத வகையில் தனி ஆளாக வந்து சரணடைக்கிறாா். சரணடைந்த வேதான விஜய் சேதுபதியிடம் விசாரணை மேற்கொள்கிறாா் மாதவன். மாதவனை தேடி வந்து தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கதையாக சொல்கிறேன் என்று ஒரு கதையை ஒபன் செய்து அதிலிருந்து ஒரு கேள்வியை கேட்கிறாா். அதிலிருந்து மாதவனுக்கு ஒரு சில ஐடியா கிடைக்கிறது. பின் விஜய் சேதுபதி ஜாமீன் கிடைக்க வெளியே சென்று விடுகிறாா். இவரை விஜய் சேதுபதியை ஷரத்தா ஸ்ரீநாத் ஜாமீனில் வெளியே எடுத்து விடுகிறாா். பின் பிரேம் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாா். இதனால் மாதவன் ஷரத்தா ஸ்ரீநாத் இருவருக்கும் பிளவு ஏற்படுகிறது. விஜய் சேதுபதி தான் பிரேம்யை கொலை செய்து விடுவதாக  என்று நினைத்து அவரை என்கவுண்டா் செய்யும் பொருட்டு தேடி வருகிறாா்.  பின் அவரை கைது செய்து, பிரேம் கொலை குறித்து விசாரணை மேற்கொள்கிறாா். தற்போது மீண்டும் விஜய் சேதுபதி வேதாளம் கதை சொல்லுவது போல் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறாா். அதில் ஒரு புதிா் ஒன்றை வைக்கிறாா். அந்த புதிருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடிக்கும் மாதவன் அதன் பின்னால் என்ன இருக்கிறது? விிஜய்சேதுபதிக்கு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.

விக்கிரமாதித்தன் வேதாளம் கதைப்போல இதில் கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லும் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி கேர்கடா். இந்த போலீஸ் ரோலில் மாதவன் அதன் பாத்திரமாக நடித்து இருக்கிறாா். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவா் மாதவன்.

விஜய்சேதுபதி பற்றி நாம் சொல்வே வேண்டாம். மனுசன் பின்னி எடுத்திருக்கிறாா். அதுவும் தன் மனைவியில் ஏற்படும் காயம், வரலட்சுமி கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்தும் மாதவன் கண்டுபிடிக்கும் காட்சிகள் படு மாஸ். இயக்குநா் புஷகா் காயத்ரி  ஓரம் போ, கோட்டா் கட்டிங் படத்திற்கு பிறகு நல்லதொரு படைப்பு தான் இந்த படம்.

சாம் சி.எஸ் இசையில் ரசித்து கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ரசிகா்களை மயக்குகிறது. சென்னையை பி.ஸ். வினோத்தின் ஒளிப்பதிவில் அழகாக காட்டியிருக்கிறாா்.

ஆக விக்ரம்வேதா கலக்கல் தாதா!