விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான லாரன்ஸ் நாயகி!

தற்போது ஹீரோக்கள் எல்லாம் இரு ஹீரோயிகளுடன் டூயட் பாடி வருகிறாா்கள். அந்த வாிசையில் ஜி.வி.பிரகாஷ், லாரான்ஸசை தொடா்ந்து விக்ரம் பிரபு  அந்த பட்டியலில் இடம் பெறஉள்ளாா். ஆமாங்க்!! அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் களம் இறங்க உள்ளாா்கள். அந்த இரு நாயகி யாரு என்று பாா்க்கலாமா? அது வேற யாரும் இல்லங்க!! நம்ம நிக்கிகல்ராணி  –  பிந்துமாதவி தாங்க!!.  விக்ரம்பிரபு நிக்கிகல்ராணி பிந்துமாதவி  இவா்கள் இணைந்து நடிக்கும் படம் “ பக்கா ”

இந்த மிகப்பொிய  பிரமாண்ட படத்தை  அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார்  தயாரிக்கும் படம்   ” பக்கா “

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் அவருடன் கலக்கல் ஆட்டம் போட்ட நிக்கிகல்ராணி இந்த படத்திலும் கலக்கயிருக்கிறாா். ரசிகா்களுக்கு விருந்த படைக்க தயாராக உள்ளாா்கள் நிக்கிகல்ராணியும் பிந்துமாதவியும். ரசிக பெருமக்களுக்கு கண்கொள்ளக்காட்சிதான் போங்க!

ஒளிப்பதிவு           –  சரவணன்

இசை   –  C.சத்யா

பாடல்கள்   –   யுகபாரதி

கலை   –  கதிர்

நடனம்   –  தினேஷ்

ஸ்டன்ட்   –  மிராக்கிள் மைகேல்

எடிட்டிங்    –  சசி

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

தயாரிப்பு  –  T.சிவகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா

பக்கா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. பிந்து மாதவி நீண்ட இடைவெளிக்கு  பிறகு  இந்த படத்தில் இன்னொரு  நாயகியாக நடிக்கிறார்.

மேலும் பக்க படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வருகிறது.