நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணன்’ என்ற படத்தை தயாரிக்கின்றது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

தமிழ், இந்தி உள்பட பலமொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் பலமொழிகளில் டப் செய்யப்பட்டு மொத்தம் 32 மொழிகளில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது பாகுபலியை விட பல மடங்கு பிரமாண்டமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது