விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சாமி
ஸ்கொயர்’ திரைப்படம் நாளை முதல் உலகெங்கும் திரைக்கு
வர இருக்கிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து
வெளிவந்த படம் ‘சாமி’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல
வரவேற்பை பெற்று, சூப்பர்ஹிட்டானது

இப்படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து,
15ஆண்டுக்குப் பின்பு, நடிகர் விக்ரமும், இயக்குநர் ஹரியும்
கைகோர்த்திருக்கும் படம் ‘ சாமி ஸ்கொயர்’.

இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஸ், பாபி சிம்ஹா,
சூரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்
நடித்துள்ளனர்.

‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தை’தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’
நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் , தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும்
சேர்ந்து ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை பாடியுள்ளனர்.

இந்நிலையில், நாளை உலகம் முழுவதும் ‘சாமி ஸ்கொயர்’
திரைப்படம் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த
உற்சாகத்தில் உள்ளனர்.