விக்ரம் வேதா 50 கோடி வசூல் வசூல் செய்ததா?

கடந்த ஜூலை 21 ஆம் தேதி ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியானது. பலதரப்பட்ட வேடங்களை ஏற்கும் தனித்துவ நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இதில் முதல்முறை இணைந்து நடித்துள்ளனர். இந்தப் புதிய கூட்டணியில் வெளியான ‘விக்ரம் வேதா’தமிழ்ப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் 50 கோடிரூபாய் வசூலை எட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜி.எஸ்.டி பிரச்சனையால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஓரம் போ,  ராக்கோழி படத்தை இயக்கிய புஷகா்-காயத்ரிஇந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய பலர் நடித்துள்ளனர்.