ஹாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததற்கான காரணத்தை நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் திறமையான நடிகர்களை இனம்கண்டுஅவர்களை ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை காட்டி அழைக்கும் ஹாலிவுட். நடிகர்களும் ஆசையாகப் போனால் அவர்களுக்கு துண்டு துக்கடா கதாபாத்திரங்களைக் கொடுத்து ஏமாற்றும். அந்த நடிகரின் மூலம் அவருக்கு மார்க்கெட் உள்ள பகுதிகளில் லாபம் பார்க்கும் வேளையைக் காலம் காலமாக செய்து வருகிறது. இதில் ரஜினி, அனில் கபூர், இர்பான் கான் என யாரும் விதிவிலக்கில்லை.

இதன் மூலம் ஹாலிவுட்டின் எல்லை பிராந்திய மொழிப் பேசும் பகுதிகளிலும் விரிவடைகிறது. இந்நிலையில் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று தி மேட்ரிக்ஸ் பட நாயகன் கேயானு ரீவ்சுடன் நடிக்க விக்ரமை அனுகியிருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால் அதை விக்ரம் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து ‘ஹாலிவுட்டின் தந்திரங்களுக்கு நடிகர்கள் அடிபணியாமல் இருக்க வேண்டும்’ என காட்டமாக பதிலளித்துள்ளார். விக்ரம் நடிப்பில் அடுத்த வாரம் கடாரம் கொண்டான் படம் ரிலீஸாக இருக்கிறது.