அஜித்-விஜய்யும் தொழில்முறையாக போட்டி போட்டுக் கொண்டாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்தான். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை பற்றி வில்லன் நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்துவரும் டேனியல் பாலாஜிதான்.

இவர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல், விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவருடனும் நடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி டேனியல் பாலாஜி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, நான் படங்களை தாண்டி இவர்கள் இருவரிடமும் கவனித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது.  

படப்பிடிப்பு நடக்கும்போது சரியான நேரத்துக்கு இரண்டு பேரும் வந்துவிடுவார்கள். அதேபோல், வந்தவுடனே அனைவருக்கும் வணக்கம் தெரிவிப்பார்கள். மற்றவர்களிடம் மிகவும் தன்மையாக பேசுவது, இயக்குனர், தயாரிப்பாளர்களை அணுகும் முறை என இருவருக்குமே பொதுவான கேரக்டர்கள் நிறைய இருக்கு. ஆனால், அவர்களுடைய ரசிகர்களில் சிலர்தான் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். உண்மையிலேயே அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் என்று முடித்தார்.