விறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்!

06:28 மணி

அண்மையில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள படம் ‘மாநகரம்’.

வில்லன் பாத்திரமாக இருந்தாலும்  இப்படத்தின் கதை மையம் கொள்ளும் பாத்திரமாக இருப்பது பிகேபி என்கிற பயங்கர மான அந்தத்  தாதா பாத்திரம் தான்.

அப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுசூதன் , பார்ப்பவர்களை மிரள வைத்தாலும் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசவில்லை. அடித்து துவைத்து ஆவேசம் காட்டவில்லை. பெரும்பாலும்  அமர்ந்தபடியே இருந்தே தன் உடல் மொழியால் அப்பாத்திரத்தின் அடர்த்தியைக் காட்டியிருக்கிறார். பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

தான் நடிக்கும் படங்களில் இப்படித்  தன் கரடு முரடு தோற்றத்தாலும் அளவானஅடக்கமான உடல் மொழியாலும் அசத்தி ,இன்று விறுவிறுப்பான வில்லன் நடிகராக வளர்ந்து வருகிறார்  இந்த மதுசூதன்.

விஜய் மில்டன் இயக்கிய

‘கோலி சோடா’வில் நாயுடுவாக அழுத்தமாகப் பதிந்து அலறவைத்தவர், அதற்கு முன் 10 படங்களில் நடித்து இருக்கிறார்.  ஆனாலும் வெளியே தெரியாமல் புகழ் மறைவுப் பிரதேசத்திலேயே இரு ந்திருக்கிறார்.

‘கோலி சோடா’வுக்குப் பிறகு ‘ஜீவா’ , ‘வன்மம்’ , ‘மாஸ்  ‘ ,’தனி ஒருவன் ‘,’இது நம்மஆளு’, ‘கதகளி’, ‘காஷ் மோரா’,’.குற்றமே தண்டனை’ ‘எனத் தமிழில் பலதரப்பட்ட கதாநாயகர்களுடன் விறைப்பும் முறைப்பும் காட்டியவர் , பிறகு மலையாளம்’ தெலுங்கு’ கன்னடத்தையும் விட்டு்  வைக்க வில்லை. தெலுங்கில் ‘கிக் 2’,   ‘பாகு பலி 2’ , நாக சைதன்யாவின் புதிய படம்  , மலையாளத்தில் ஆதம் பிருத்திவிராஜ் படம் , தமிழில் விக்ரம் பிரபுவுடன் ‘நெருப்புடா ‘. கிருஷ்ணாவுடன் ‘பண்டிகை’ , விஷால் , சந்தானம் நடிக்கும் வெவ் வேறு புதிய படங்கள் என வரிசை கட்டி நிற்கின்றன படங்கள். கன்னடத்தில் நடித்து முடித்து 3 படங்கள் வெளிவரவுள்ளன.

மும்மொழி நடிகராக வலம் வரும் மதுசூதன் திடீரென இந்த நிலையை எட்டிவிட முடியவில்லை. பெரிய பெரிய படங்களில் கூட ஆரம்பத்தில்  சிறு சிறு வேடங்களில் தான் நடித்திருந்தார்.

தன் போக்கு  பாதை பயணம்  பற்றிக் கூறும்போது

“எனக்குப் பிடித்தது சினிமா. ஆரம்பத்தில் எனக்குக் கனவுகள் இருந்தன. பலதரப்பட்ட வெவ்வேறான  அனுபவங்களுக்குப் பிறகு நம்மிடம் எதுவுமில்லை நம்மால் எதுவுமில்லை .காலம் அழைத்துச் செல்லும் பாதையில் பயணம் செய்வது என்கிற தெளிவு வந்து விட்டது. அப்படியே  செய்து வருகிறேன். “

தத்துவமாகப் பேசிவிட்டு அப்பாவி போலச் சிரிக்கிறார் .

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com