இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்த பின் அதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களே தேடி வருவதால் விமல் நொந்து போயுள்ளாராம்.

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் பல கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால், இப்படத்தை இளசுகள் ரசித்து பார்த்தனர்.இப்படத்திற்கு அடுத்ததாக விமல் புரோக்கர் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் எதுமாதிரியான கதையம்சம் கொண்ட படம் என தெரியவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் பார்த்திபனுடன் சேரும் வடிவேலு

இந்நிலையில், ஹரஹர மகாதேவிக்கி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து வரிசையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படமும் இடம் பெற்று வசூலை பெற்றதால், அதே போன்ற கதையம்சம் கொண்ட படங்களே விமலை தேடி வருகிறதாம்.

மார்க்கெட்டை தக்க வைக்க அப்படி ஒரு படத்தில் நடித்தேன். ஆளை விடுங்கள் என விமல் தெறித்து ஓடுகிறாராம்.