விமல் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகி வரும் படம் ‘மன்னர் வகையறா’. இந்த படத்தை விமலின் சொந்த படநிறுவனமான ‘A3V சினிமாஸ்’ தயாரிக்கிறது. பூபதி பாண்டியன் இயக்கி வரும் இந்த படத்தில் விமல் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகி பாபு, ஜெயபிரகாஷ், ‘யாரடி மோகினி’ படத்தில் நடித்த கார்த்திக், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

      அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் டிரைலரை நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் விமல் முடிவு செய்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பொங்கலுக்கு வெளியாகும் ‘மன்னர் வகையறா’ திரைப்படம் தனக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் விமல்!