விஷால் நடித்த ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியை அக்கா, அக்கா என்று கூறும் மாற்று திறனாளியாக நடித்த விநாயகன் என்பவர்தான் தற்போது விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இவர் மலையாளத்தில் ‘களி’, ‘கம்மட்டி பாடம்’ மற்றும் தனுஷின் ‘மரியான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமே பாராட்டு அளவுக்கு வில்லத்தனமாக கேரக்டரில் இவர் நடித்துள்ளதாகவும், இவரின் நடிப்பை பாராட்டிய இயக்குனர் கவுதம் மேனன், தனது அடுத்த படத்திலும் அவருக்கு முக்கிய கேரக்டரை கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது