அஜீத், யுவன் மியூசிக்கல் ட்ரீட் வித்தியாசமானது இவர்களது கூட்டணியில் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த தீனா பாடலாக இருக்கட்டும் , பின்பு 2007 ல் வந்த பில்லா படமாகட்டும் பின்னணி இசையிலும் பாடல்களிலும் பட்டைய கிளப்பியது.

தொடர்ந்து ஏகன், மங்காத்தா,ஆரம்பம் என அஜீத்தின் பேவரைட் மியூசிக் டைரக்டரானார் யுவன்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜீத், யுவன் இணையவிருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.

யுவன், அஜீத் கூட்டணியை அதிக ரசிகர்கள் எதிர்பார்க்கும் வேளையில் இச்செய்தி அஜீத் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.