Director H. Vinoth – நேர்கொண்ட பார்வை படத்தை இயக்க தயங்கியதாக இயக்குனர் வினோத் பேட்டி கொடுத்துள்ளார்.

அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சாரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'விஸ்வாசம்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்நிலையில், இப்படத்தை இயக்கிய வினோத் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இப்படத்தை நான்தான் இயக்க வேண்டும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் விரும்பினார். ரீமேக் படத்தை இயக்க வேண்டுமா என தயங்கினேன். ஏனெனில் சிறு தவறு நிகழ்ந்து விட்டாலும் நீ அவ்வளவுதான். நீ இன்னும் வளரனும் தம்பி என நானே என்னிடம் கூறிவந்தேன். ஆனால், நான் உனக்கு எந்த பிரஸ்ஸரும் கொடுக்கவில்லை. கதையை தயார் செய் என அஜித் கூறிவிட்டார். எனவே தொடர்ந்து 3 நாட்கள் முழுக்க பிங்க் திரைப்படத்தை பார்த்தேன். அதன்பின் இப்படத்தை தவற விட்டு விடக்கூடாது என களம் இறங்கினேன்” என அவர் கூறியுள்ளார்.