தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘விஐபி 2’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பது படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக ‘விஐபி 2’ திரைப்படம் இன்று காலை முதல் காட்சியின்போது ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷின் ’பக்கிரி’ – ஜூன் 21-ல் ரிலிஸ்

இன்று காலை 8 மணி காட்சியை பார்த்தவர்கள் பெரும்பாலானோர் தனுஷ் ரசிகர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அதனால் தனுஷ் ரசிகர்கள் தான் படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருட்டு டிவிடி, ஆல்லைன் பைரசி போலவே ஃபேஸ்புக் லைவ்வும் தற்போது திரையுலகினர்களை அச்சுறுத்தி வருகிறது.