தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘விஐபி 2’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் ரசிகர்களிடம் இருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பு அபாரமாக இருந்தாலும் தொய்வான திரைக்கதை, கஜோலின் கேரக்டருக்கு வலிமை இல்லாதது இவை எல்லாவற்றையும் விட அனிருத்தின் மிஸ்ஸிங் ஆகியவை இந்த படத்தின் மைனஸ் என படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான விமர்சனம் வந்த பின்னரே இந்த படத்தின் ரிசல்ட் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்