தனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், அமலாபால், கஜோல் உள்பட பலரது நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘விஐபி 2’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பினும், அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விவேகம்’ திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு நாளை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் நாளை மாலை 7 மணிக்கு ‘விஐபி 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.