செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஐபி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சிங்கப்பூர் சென்சார் P13 சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனால் இந்த படம் குழந்தைகள் பார்க்க அனுமதிக்கப்படும் படமாக உள்ளது.

மேலும் சிங்கபூர் சென்சார் மூலம் இந்த படத்தின் ரன்னிங் டைம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படம் 128 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. பொதுவாக ஒரு தமிழ்ப்படம் இரண்டரை மணி நேரம் ஓடும் நிலையில் இந்த படம் 2 மணி நேரம் மட்டுமே ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் கதைச்சுருக்கமாக ‘வளர்ந்து வரும் ஒரு இளம் கட்டிட வடிவமைப்பாளர் ரகுவரனுக்கும், முன்னணி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வசுந்தராவுக்கும் இடையேயான மோதல்கள் தான் இந்த படத்தின் கதை என்றும், அந்த சென்சார் சான்றிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.