நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலை நேற்று போலீஸ் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன் தினம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சங்க அலுலவகத்துக்கு பூட்டு போட்டு விட்டு சென்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை எனவும் ரூ.7 கோடி அவர் சங்க வைப்பு நிதியை தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் கூறினார்.

நேற்று காலை சங்கத்திற்கு வந்த விஷால், பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றார். ஆனால், பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் விஷால் வாக்குவாதம் செய்ததால் அவரை கைது செய்து மாலை விடுவித்தனர். மேலும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஷாலை கிண்லடித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. விஷால் கைது செய்த வீடியோ தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மினு கைது பண்ணுவோம்னு சொன்ன விஷாலை கைது பண்ணியை வீடியோவை போட்டுட்டானுக என நெட்டிசன்கள் கிண்லடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.