ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. விஜய் சிகரெட் பிடிக்கும் லுக்கில் அமைந்த போஸ்டரை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட பலரின் எதிர்ப்புக்கு உள்ளானதால் அப்போஸ்டரை சுகாதாரத்துறை வலியுறுத்தலின் பேரில் நீக்கப்பட்டது.

அதன் பிறகு சர்கார் படம் பற்றிய சிறு புகைப்படம் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் முதன் முறையாக ஷீட்டிங் ஸ்பாட்டில் முருகதாஸ், விஜய் போன்றோர் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.