வைரல் ஆகும் “என்னங்க சார் உங்க சட்டம்”

வலைத்தளங்களில் தற்போது ஒரு குறும்படம் வைரலாக பரவி வருகிறது.

ஒரு வயசான விவசாயி அவசர தேவைக்காக ஏ.டி.எமில் பணமெடுக்க செல்கிறார். அவர் பணம் எடுக்க முற்படுகையில் ஏ.டி.எமில் ஏற்பட்ட கோளாறால் பணம் மாட்டிக் கொள்கிறது. அதன் பின் அப்பணத்தை எடுக்க அவர் படும் இன்னல்களே “என்னங்க சார் உங்க சட்டம்”.

முன்று நிமிடங்களே ஒடக்கூடிய இந்த குறும்படம் வெளியான நாள் முதல் சமுக வளைதளங்கள், வாட்ஸ் அப் ஆகிய தளங்களில் வேகமாக பரவ தொடங்கி பெரும் வரவேற்றப்பை பெற்றுள்ளது.

வயசான விவசாயியாக “நானும் ரவுடிதான் புகழ் – ராகுல் தாத்தா” உதயபானு நடித்துள்ளார். இந்த குறும்படத்தை பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள முன்றாவது குறும்படம் இது. இவர் இதற்கு முன் இயக்கிய “ஆக்ஸிஜன்”, “பத்த வைடா பரட்ட” எனும் இரண்டு குறும்படங்கள் அனைவரின் பாரட்டையும் பெற்று கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்