இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் சற்றுமுன்னர் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இனிதே முடிந்ததாக விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

நண்பர்கள் மற்றும் கோஹ்லி – அனுஷ்கா தரப்புக்கு நெருக்கமான நபர்கள் முன் இந்த திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே விராத்-அனுஷ்கா இருவரும் காதலித்து வந்த நிலையில் இடையில் ஒரு சிறு ஊடல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.