Virat Kohli – இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அவரின் சிறு வயது புகைப்படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வெளியிட்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விராட் கோலி தனது கையை இடுப்பில் வைத்துகொண்டு மைதானத்தில் நிற்கும் புகைப்படத்தை, அவர் அதேபோல் சிறு வயதில் நிற்கும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இதை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர இது விராட் கோலியின் பார்வைக்கும் சென்றுவிட்டது.

அப்புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி ‘ நான் 90 களிலிருந்தே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறேன்’ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.