மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு “ஆணும் பெண்ணும் சமம்” என்ற கருத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொள்கிறார். மேலும் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். முக்கியமாக விராட் கோலி, ஷேவாக், பிரியங்கா சோப்ரா மற்றும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் “ஆணும் பெண்ணும் சமம்” என்ற கருத்தில் மார்ச் 8ம் தேதி வரை நடக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபட போவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சாரத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கி வைத்தார்.